இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார்.விருச்சிக ராசியில் அனுஷம் பின் கேட்டை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வில் தடை ஏற்படலாம். உறவுகள் மேம்படும். தனிப்பட்ட வாழ்க்கை, பணியிடம் என இரண்டையும் சரியாக நிர்வகிக்க முடியும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வருமானம் சிறப்பாக இருக்கும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். ஆடம்பரத்திற்காக அதிகம் செலவிடுவீர்கள். இன்று காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். உங்கள் வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்தவும். இன்று குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதில் அக்கறை செலுத்தவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களின் கவனமான செயல்பாடு, கடின உழைப்பு மேலதிகாரிகளிடம் பாராட்டை பெற்று தரும். காதலில் அன்பு கிடைக்கும்.வாழ்க்கைத் துணையுடன் உறவு பயன்படும். குடும்பப் பொருட்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் முடிக்க நினைத்த லட்சியத் திட்டங்கள் நிறைவேறாததால் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் திறமையை முன்னேற்ற முயற்சி எடுப்பீர்கள். சோம்பேறித்தனத்தை விடுத்து சூழ்நிலையை தைரியமாக எதிர்கொள்ள முயற்சிக்கவும். வாழ்க்கையில் முரண்பாடுகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான திட்டங்களில் ஈடுபடுவீர்கள். காதல் வாழ்க்கையில் நல்லிணக்கத்தை பேணவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் விருப்பங்களும், இலட்சியங்களும் நிறைவேறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து பெரும் உதவி கிடைக்கும். உங்களுக்கு சாதகமான சில ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் முடியும். இன்று குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் அன்பும், அமைதியும் அதிகரிக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் விவேகமான செயல்பாடு மற்றும் சிறப்பான முடிவுகளால் முன்னேற்றம் அடைவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். இன்று உங்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். குடும்பத்தில் செழிப்பான சூழல் இருக்கும். காதல் விஷயத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட துர பயணங்கள் லாபகரமானதாக அமையும். இன்று வருவாய் நிச்சயமாக மேம்படும். புதிய வருமானம் தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கும்.இன்று உங்களின் உற்சாகம் அதிகரிக்கும். முடிவுகளை விரைவாக எடுப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் அருளால் குடும்பம் மற்றும் தனிப்பட்ட உறவுகளில் சிறப்பான முன்னேற்றத்திற்கு வாய்ப்பு உண்டு.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலதிபர்களுக்கு தொழில் தொடர்பாக புதிய மாற்றங்கள் ஏற்படும். இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். நிதிநிலை முன்னேற்றம், மரியாதை அதிகரிக்க கூடிய நாள். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் இணக்கமான சூழல் இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் வெற்றியை தரும். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் பொறுமையால் குடும்ப உறவுகளை மேம்படுத்த முடியும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் விருப்பங்கள் நிறைவேற கூடிய நாள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வணிகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் லாபத்தை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை நல்லது காதல் தொடர்பான விஷயத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களின் முடிவுகளால் லாபம் அதிகரிக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தொடர்பாக செயல்பாடு முன்னேற்றத்தை தரும் . அன்றாட பணிகளை முடிக்க முடியும். இன்று செல்வாக்கு மிக்க நபர்களின் தொடர்பு கிடைக்கும். நிதி ரீதியான முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். குடும்ப உறவுகள் மற்றும் பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். உங்களின் சிறப்பான புரிதலால் உறவு மேம்படும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் நம்பிக்கையால் செயலில் முன்னேற்றம் ஏற்படும். புத்திசாலித்தனமான முடிவுகள் லாபத்தை பெற்று தரும். வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஆதரவு பெறுவீர்கள். இன்று சில முக்கிய வேலைகளை முடிப்பதில் பரபரப்பு மற்றும் மன அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும்.