Sunday, May 4, 2025
Homeஇந்தியாஇந்தியாவின் உத்தரகாண்டில் மாடு ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போகும் வீடியோ

இந்தியாவின் உத்தரகாண்டில் மாடு ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போகும் வீடியோ

மாடு வீதியில் செல்லும்போது பல்லரும் அஞ்சி ஒதுங்கி போவார்கள் காரணம் மாடும் தம்மை முட்டிவிடும் என்கிற அச்சத்தினால் தான். அப்பாடியான சம்பவங்களும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றது.இந்நிலையில் மாடு வண்டி ஓட்டி சென்ற காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்,

இந்தியாவின் உத்தரகாண்டில் இருக்கும் ரிஷிக்கேஷில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மாடு ஒன்று ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கிறது.ஒரு ஓரத்தில் சென்று கொண்டே இருந்த அந்த மாடு, ஒரு கட்டத்தில் வெள்ளை நிறத்தில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டியை பார்க்கிறது.அதை கடந்து போக நினைத்து மீண்டும் அதனை பார்த்து மீண்டும் அதனருகில் செல்கிறது. பின்னர் என்ன நினைத்ததோ தெரியவில்லை, அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு தள்ளிக்கொண்டு பாேய்விட்டது.பின்னர், சிறிது தூர இடைவேளைக்கு பிறகு அதனை நிறுத்தி வைத்துவிட்டு, அது ஒரு பக்கமாக நடந்து செல்கிறது. ஸ்கூட்டி எங்கே என தேடியவர்கள் சிசிடிவி கேமராவை பார்க்கையில் இதனை கண்டுபிடித்திருக்கின்றனர்.இதில், ஒரு மாடு சிவனேன்னு ரோட்டில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி, அதனை தள்ளிக்கொண்டு செல்லும் காடியை பார்த்து அதிர்ந்து போனார்கள்.இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த வண்டியையும் மாடு யார் மீதும் மோதவில்லை, யாரும் வந்து அந்த மாட்டின் மீது மோதவில்லை. மாடு, ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போகும் வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:  கையெழுத்து போராட்டம் மேற்கொள்ள பொலிஸார் தடை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!