யாழில் புது மனைவிக்கு சுவையாக பிரியாணி செய்ய தெரியவில்லையனகூறி , வெளிநாட்டு மாப்பிள்ளை விவகாரத்து கோரிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.திருமணமான 4 மாதங்களில் மாப்பிள்ளை விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ் மாவிட்டபுரம் பகுதியை பூர்வீகமாக கொண்ட, டென்மார்க் வாழ் நபரே விவகாரத்து கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.யாழ்ப்பாணம், உடுவில் பகுதியை சேர்ந்த 27 வயதான யுவதியுடன் , டென்மார் வாழ் 41 வயதான நபருக்கு இந்த வருட ஆரம்பத்தில் திருமணமானதாக கூறப்படுகின்றது.
41 வயதான மாப்பிள்ளை டென்மார்க் சென்று, மனைவியை அங்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.எனினும், இலங்கையை விட்டு புறப்படுவதற்கு முன் மனைவி குடும்பத்தினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.மனைவியை பிரியாணி தயாரிக்குமாறு கூறிய நிலையில், மனைவி தயாரித்த பிரியாணியை சாப்பிடவே முடியவில்லையென்றும், பிரியாணி சமைக்க தெரியாத மனைவியை டென்மார்க் அழைத்து செல்வது தனக்கு வெட்கம் என்றும் குறிப்பிட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார்.அதன் பின்னர் டென்மார்க் சென்ற பின்னர், மனைவி குடும்பத்தினருடனான தொடர்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து தற்போது, சட்டத்தரணி ஒருவர் மூலம் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.மேற்படி நபர் ஏற்கெனவே திருமணமானவர் என்றும், அந்த திருமணத்தையும் 6 மாதங்களில் முறித்துக் கொண்டதாகவும், பெண் தரப்பினர் கூறியதாகவும் கூறப்படுகின்றது.