யாழ்ப்பாணம், வலி வடக்கு – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி பொது மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று (12) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.வெசாக் தினத்தை முன்னிட்டு விகாரையில் விசேட பூசைகள் நடைபெறவுள்ள நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.காணி உரிமையாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், பொது மக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.