Tuesday, May 13, 2025
Homeஇந்தியாகாஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியாயம் வாய்ந்தது: பிரதமர் மோடி உரை

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியாயம் வாய்ந்தது: பிரதமர் மோடி உரை

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ந்தேதி சுற்றுலாவாசிகள் பொழுது போக்கி கொண்டிருந்தபோது, ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அவர்கள் ஆண்களாக குறி வைத்து சுட்டு வீழ்த்தினர். அதிலும், சந்தேகம் தீர சிலரிடம் உங்களுடைய மதம் என்னவென்று கேட்டு விட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.இந்த பயங்கரவாத தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி உள்பட 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு வார நிசப்தத்திற்கு பின்னர், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன.இந்திய ஆயுத படைகள் கடந்த 6-ந்தேதி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளையும், பயங்கரவாதிகளையும் குறி வைத்து தாக்கியது. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தரப்பில் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அவற்றை இந்தியா முறியடித்தது.இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. 4 நாட்களுக்கு நீடித்த இந்த போர் பதற்றம், பின்னர் ஒரு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தமும் ஏற்பட்டது. எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டல்.ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டு, நாட்கள் சென்ற நிலையில் முதன்முறையாக, பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

அவர் எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்தவித சமூக ஊடகத்திலும் இதுவரை கருத்துகள் எதனையும் பதிவிடவில்லை. மக்களிடமும் பேசவில்லை. பாகிஸ்தான் தாக்குதலின்போது, அதனை எதிர்கொள்வது பற்றி முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோரிடம் அவர் தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.இதில், பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது பற்றியும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி, மக்களிடம் இன்று பேசுகிறார். அந்த வகையில், இது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்றிரவு 8 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார். அவர் உரையை தொடங்கி பேசும்போது, நாட்டின் படைகளுக்கும், உளவு துறைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் நான் தலை வணங்குகிறேன். நம்முடைய வீர படைகளின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன். நாட்டின் திறன் கடந்த சில நாட்களில் உறுதியுடன் வெளிப்பட்டு உள்ளது என்றார்.ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற ஆதரவாக நின்ற மக்களுக்கு நன்றி. அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்.
பஹல்காம் தாக்குதல் மிகுந்த மனவலியை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகள் கருணையின்றி சுற்றுலா பயணிகளை படுகொலை செய்தனர். குடும்பத்தினரின் கண் முன்னே அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டனர். காஷ்மீரில் நடந்த இந்த தாக்குதல் மக்களை கலக்கமடைய செய்தது.இதற்கான இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியாயம் வாய்ந்தது. அனைத்து சமூகமும், அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் இந்தியாவுக்கு ஆதரவாக நின்றன. கடந்த 6-ந்தேதி நமது மன உறுதியின் விளைவை உலகம் பார்த்தது.ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் இல்லை. இந்த பதிலடி பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி. உலக பயங்கரவாதத்தின் தலைமை மையங்கள் தகர்க்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். இதனால், பாகிஸ்தான் இன்று விரக்தியின் உச்சத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  காவல் நிலையத்தின் பெயர்ப் பலகையில் சிறுநீர் கழித்த காவல்துறை அதிகாரி கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!