விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 30, செவ்வாய்க் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷம் ராசியில் உள்ள ரேவதி, அஸ்வினி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் நிதி நன்மைகள் பெறுவீர்கள். இன்று சமூகத்தில் உங்களின் கௌரவம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சனை நிறைந்ததாக இருக்கும். இருப்பின் அதற்கான தீர்வுகள் கிடைக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. தேர்வுக்கு தயாராகக்கூடிய மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்கவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான பலன் கிடைக்கக் கூடிய நாள். இன்று காதல் அல்லது திருமண வாழ்க்கையில் துணையின் உணர்வுகளைப் புரிந்து செயல்படவும். பணியிடத்திலும் உங்களின் ஆலோசனை வரவேற்கப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் உற்சாகமாக நேரத்தை செலவிடுவீர்கள். புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்க்கையில் நல்ல செய்தி தேடி வரும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் கிடைக்கக்கூடிய நாள். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக கவலை ஏற்படும். அது தொடர்பான முதலீடு செய்வீர்கள். இன்று உங்கள் பணத்தை சேமிப்பதில் அக்கறை செலுத்தவும். இன்று பணத்தை கடனாக கொடுக்க வாய்ப்பு குறைவு. தொழிலதிபர்களுக்கு தோன்றக்கூடிய யோசனைகள் செயல்படுத்த சாதகமான நாள். இன்று லாபம் ஏற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோருடன் புனித யாத்திரை செல்ல வாய்ப்பு உண்டு.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். அதனால் மனசுமை குறையும். இன்று காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இன்று உங்கள் மனதில் பழைய வெறுப்பு, எதிர்மறையான எண்ணங்களை விலக்கி நேர்மறையாக சிந்தித்து செயல்படவும். இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டு.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தொழில், வியாபாரம் தொடர்பாக கடன் வாங்க நினைப்பவர்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் வந்து ஏமாற்றமான செய்திகள் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் போது குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை கேட்பது நல்லது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு பதவி, பொறுப்பு கிடைக்கக்கூடிய சிறப்பான நாள். உங்களின் பேச்சாலும் மரியாதை அதிகரிக்கும்.புதிய தொழிலை தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று பிள்ளைகளிடம் இது சில நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் விருந்து, கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிக்கல் நிறைந்த நாளாக இருக்கும். தொழில் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்று மகிழ்வீர்கள். இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். கடனிலிருந்து விடுபட வாய்ப்பு உண்டு. இன்று உங்களின் சிறப்பான செயல்பாடு வேலைகளை முடித்து நிம்மதியை உணர வைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய அதிக செலவு ஏற்படும். இன்று உங்கள் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செயல்படவும், இல்லையெனில் நிதி நெருக்கடியை சந்திக்க வாய்ப்பு உண்டு. திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக வருமான ஆதாயம் அதிகரிக்கும். அதனால் நிதி நிலை மேம்படும். உடன் பிறந்தவர்களின் அன்பையும் ஆதரவு கிடைக்கும் பெறுவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் இருக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டின் அமைதியை பராமரிப்பதற்கான வேலையில் ஈடுபடுவது நல்லது. நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அதனால் மனம் நிம்மதியாக உணர்வீர்கள். ஒரு குடும்ப உறுப்பினரின் உடல்நல குறைபாடு மனக் கவலையை தரும். அதனால் அலைச்சல் ஏற்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அதற்கு முன் அனுபவம் வாய்ந்தவரின் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. இன்று எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இன்று சில முக்கியமான வேலைகளை முடித்து மகிழ்வீர்கள்
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் திடீர் பண லாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதன் மூலம் குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். உணவு சார்ந்த விஷயங்கள் கவனம் தேவை. இன்று சிலருக்கு வயிறு தொடர்பான தொந்தரவு அதிகரிக்கும். தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்கள் சிறப்பான வெற்றியை தருவார்கள். திருமண முயற்சியில் உள்ளவர்கள் நல்ல துணை அமையும்.