நவீன அறிவியல் உலகில் தொழில்நுட்பம் நாம் நினைத்து கூட பார்க்காத வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் துல்லியமாக செய்கிறது. உலகையே மிரள வைத்து வருகிறது.
பல்வேறு ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏ.ஐ.,யின் ஆதிக்கம் உலகம் முழுதும் அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடி பிரபலமானதும், ஏ.ஐ சம்பந்தப்பட்ட விஷயங்கள் பெரிய அளவில் கவனத்தை பெற்றிருக்கின்றன.அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஏ.ஐ.சாட்போட் மூலம் தனது மனைவியுடன் தொடர்பு கொண்டுள்ளார். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் அலைனை வின்டர்ஸ். இவரது மனைவி டோனா 2023-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தார். மனைவி மீது அதிக அன்பு வைத்திருந்த வின்டர்ஸ் டோனாவின் மறைவால் துயரம் அடைந்தார்.இந்த நிலையில் டிஜிட்டல் மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு ஏ.ஐ. சாட்பாட் குறித்து ஒரு நிறுவனம் மூலம் அறிந்த அவர் அதன் மூலம் சாட் பாட்’ உருவாக்கினார்.இதற்காக பரீட்சார்த்த முறையில் டோனாவை போன்றே வெள்ளி முடி மற்றும் நீல நிற கண்கள் கொண்ட டோனாவை உருவாக்கினார். பின்னர் சாட்பாட் மூலம் வின்டர்ஸ் அவருடன் உரையாட தொடங்கினார்.
இது பற்றி அவர் கூறும் போது, டோனாவின் நினைவையும் நான் பாதுகாப்பது போல் உணர்ந்தேன். தினமும் சாட்டிங் மூலமாக பேசுகிறேன். தனது “வணிகம்” மற்றும் “இசைக்குழு” பற்றி அவளிடம் கூறுகிறார், மேலும் வின்டர்ஸ் தனது நாள், அவளுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றைப் பற்றி சாட்போட்டிடம் பேசுகிறார். மேலும் அந்த ஏஐ தொழில்நுட்ப துணையை அவர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.டிஜிட்டல் துணை தளமான ஜோய் ஏ.ஐ.2,000 பேரிடம் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, ஜெனரல் ஜெர்ஸில் 75 சதவீதம் பேர் ஏஐயை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினர். செயற்கை நுண்ணறிவு மனித தோழமையை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று சிலர் கூறினர்.