இலங்கையில் இனிமேலும் பிரபாகரன் உப்பு என்று எதுவும் இல்லை என அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடனான கடும் வாக்குவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.வடக்கு உப்பை தெற்கிற்கு விநியோகிப்பதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஆனையிறவு உப்பு தொழிற்சாலையில் தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தினார் என சுனில்ஹந்துநெத்தி தெரிவித்தார்.
வடக்கு உப்பு தெற்கு உப்பு என்று எதுவும் இல்லை இலங்கையின் உப்பே உள்ளது.அந்த நாட்களில் நீங்கள் பிரபாகரன் உப்பை வைத்திருந்திருக்கலாம் ஆனால் அவ்வாறான இன்று அவ்வாறான உப்பு எதுவுமில்லை நாங்கள் நாட்டை ஐக்கியப்படுத்திவிட்டோம் என தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த அர்ச்சுனா நான் வடக்கு உப்பை தெற்கிற்கு வழங்கவேண்டாம் என தெரிவிக்கவில்லை தொழிலாளர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காணுங்கள் என்றே வேண்டுகோள் விடுத்தேன் என தெரிவித்தார்.