Saturday, June 7, 2025
Homeஉலகம்அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: எலான் மஸ்க்

அமெரிக்க அதிபராக 2-வது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டிற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டாஜ் துறையில் தலைமை ஆலோசகராக உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநருமான எலான் மஸ்க்கை நியமித்தார். இவருடைய ஆலோசனையின் பேரில், ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சிலவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.இதையடுத்து அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும், எலான் மஸ்கிற்கு எதிராகவும் அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் செனட் அவையில் ‘பிக் பியூட்டிஃபுல்’ என்ற மசோதா சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. அடுத்து, செனட் சபையில் நிறைவேற இருக்கிறது. இந்த மசோதா பல்வேறு பொருளாதார செலவீனங்களை மாற்றி அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2017-இல் டிரம்ப் கொண்டு வந்த வரி சீர்திருத்தங்களை நீட்டிப்பது, வரிச்சலுகை அளிப்பது ஆகியவை முக்கிய அம்சமாக உள்ளது. மேலும், குடியேற்றம் தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவதும் இதில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டும் இன்றி மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி சலுகைகளையும் ரத்து செய்யும் அம்சம் இடம் பெற்றுள்ளது.இதனால் எலான் மஸ்க் கடும் கோபம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. டிரம்பின் இந்த மசோதா அருவருப்பானது என்று சாடியிருந்தார். இந்த விவகாரத்தில் டிரம்புக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. நான் இல்லையென்றால் டிரம்பால் வெற்றி பெற்றிருக்க முடியாது எனவும் டிரம்ப் நன்றியுணர்வு அற்றவர் எனவும் கடுமையாக சாடியிருந்தார். இருவருக்கும் இடையே மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், துணை அதிபர் ஜேடி வான்சை அந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!