Saturday, June 7, 2025
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன் - 07-06-2025

இன்றைய ராசி பலன் – 07-06-2025

இன்றைய ராசி பலனை (ஜூன் 7, 2025 சனிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் கன்னி ராசியிலும் தொடர்ந்து துலாம் ராசியில் சித்திரை, சுவாதி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று மீனம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசிக்காரர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. வருமானத்திற்கும் செலவுக்கும் இடையே சமநிலை கடைப்பிடிப்பது அவசியம். இல்லையெனில், நிதி சிக்கல் வரலாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். தந்தையின் பொறுப்பை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். புனித யாத்திரை செல்ல திட்டம் போடுவீர்கள். தொழிலில் புதிய இயந்திரங்களை வாங்கலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். வெளிநாடு தொடர்பாக ஏற்றுமதி – இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு பெரிய ஆர்டர் கிடைக்கலாம். நிலம், வீடு தொடர்பான தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதிக முதலீடு வேண்டாம். நஷ்டத்தை ஏற்படுத்தலாம். குடும்பத்தில் விருந்து விழாக்கள் ந்ட்க்கும். அதன் மூலம் சில முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றமான நாள். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புதிய விஷயங்களை செய்வதில் ஆர்வம் ஏற்படும். வேலையில் அதிகாரிகள் சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம். சூழலுக்கு ஏற்ப புதிய திட்டங்களுடன் செயல்படுவது நல்லது. குடும்ப விஷயங்களை கவனமாக கையாளவும். பிள்ளைக்கு கிடைத்த புதிய வேலை காரணமாக மகிழ்ச்சி நிலவும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சந்தோஷமான நாள். பிள்ளைகள் மூலம் புகழ் கிடைப்பதால் பெற்றோர் மகிழ்ச்சி அடைவார்கள். புதிய வேலை, தொழில் தொடங்குவதற்கு முன் பெற்றோரின் ஆசீர்வாதத்தை பெறுங்கள். புதிய வாய்ப்புகள், ஒப்பந்தங்களில் வேலை செய்ய ஆரம்பிக்கலாம். உடல்நலப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். பழைய சண்டைகள் தீரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரை சந்திப்பீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பு தேவைப்படும் நாள். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும். உங்களின் கடினமாக உழைப்பதைப் பார்த்து மக்கள் பாராட்டுவார்கள். புதிய விஷயங்களைச் செய்ய ஆசைப்படுவதால் பிரச்சினைகள் வரலாம். அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனைப் பெற்று செயல்பட்டு முன்னேறுங்கள். சட்ட விஷயத்தில் அலைச்சல் இருக்கும். பழைய நண்பருடன் இருந்த மனவருத்தம் முடிவுக்கு கொண்டு வாருவீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் டென்ஷன் வரலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பெற்றோரின் உடல்நிலை சரியில்லாமல் போகலாம். பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும். தர்ம காரியங்களுக்கு பணம் செலவழிப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் தொடர்பான தடைகள் இன்று நீங்கும். குழந்தைகளின் பிரச்சினைகளை கேட்க நேரம் ஒதுக்குங்கள்.

இதையும் படியுங்கள்:  இன்றைய ராசி பலன் - 13-04-2025

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க முடியும். வேலையில் கவனமாக செயல்படுங்கள். மற்றவர்களை நம்பி வேலையை விட வேண்டாம். பண விஷயத்தில் கவனம் தேவை. வேலை செய்பவர்களுக்கு பதவி, சம்பள உயர்வு தொடர்பாக இடமாற்றம் ஏற்படலாம். மன உளைச்சலை தந்தையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த தீர்வு கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் செல்வாக்கு உங்களுக்கு சாதகமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகரிக்கும். திடீர் வேலை காரணமாக அலைச்சல் இருக்கும். குழந்தையின் கல்வி சம்பந்தமான நல்ல செய்தி கிடைக்கும். அரசியலில் புதிய வாய்ப்புக்காக பெரிய தலைவரை சந்திக்கலாம்.சமூக பணிகளில் முன்னேற்றம் இருக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மற்ற நாட்களை விட சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை காரணமாக மன அழுத்தம் ஏற்படும். மூத்த உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்கவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உணவில் கவனம் தேவை. வயிற்று சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான நாள். அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்கலாம். பண உதவி தேவைப்பட்டால் நண்பரிடம் கேட்கலாம். முன்பே திட்டமிட்ட வேலைகள் நிறைவேறும். பொறுமையாக இருங்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக ஆக்குங்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வழிகளில் பணம் வரும். நிதி நிலைமை வலுப்பெறும். முன்பு கடன் வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று சாதாரணமான நாள். செலவுகளைக் கட்டுப்படுத்த பட்ஜெட் போட்டு செயல்படுங்கள். குழந்தைகள் சில பொருட்களை விரும்பி கேட்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவியுடன் பேசும்போது கவனமாக இருங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!