Home » FAIRMED நிறுவனத்தின் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்

FAIRMED நிறுவனத்தின் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்

by newsteam
0 comments
FAIRMED நிறுவனத்தின் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்

FAIRMED நிறுவனத்தின் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.02.2025) காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.சமூகத்தில் பொருளாதார மட்டத்தில் நலிவடைந்த குடும்பங்கள் மற்றும் அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சித் திட்டங்களை FAIRMED நிறுவனம் முன்னெடுத்துவருகின்றது. அத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திவரும் சக்கர நாற்காளி மற்றும் மூன்று சில்லுச் துவிச்சக்கரவண்டி என்பன திருத்த வேண்டி ஏற்படும் போது அதனை FAIRMED நிறுவனத்தின் அனுசரணையில் இலவசமாக திருத்தி வழங்குவது தொடர்பான பொறிமுறையும் ஆராயப்பட்டதுடன் அதன் விபரங்களை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக விரைவில் அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, FAIRMED நிறுவன இலங்கைக்கான இணைப்பாளர் வைத்திய கலாநிதி நயனி சூரயாராச்சி, சமூகசேவை திணைக்கள மாவட்ட இணைப்பாளர் திரு. ந. ரதிகுமார், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி கி. தயாபரி, FAIRMED நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!