Google தனது AI இயங்குதளமான ஜெமினியின் சிறப்பம்சங்களை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.AI தேசிய கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.இந்த விரிவான திட்டம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சமீபத்திய செயற்கை நுண்ணறிவு கருவிகள், cloud computing தளங்கள் மற்றும் artificial intelligence வளங்களை இலவசமாக அணுக உதவும்.இந்த நடவடிக்கையானது AI அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு ஆகியவற்றிற்கான இலங்கையின் தேசிய திறனை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் அடுத்த தலைமுறையினர் புதுமைகளை உருவாக்கவும், சிக்கலான சவால்களை தீர்க்கவும் மற்றும் உலகளவில் போட்டியிடவும் உதவுகிறது.மாணவர்கள் இந்த சக்திவாய்ந்த கருவிகளை பொறுப்புடன் மற்றும் சமூகத்தின் நன்மைக்காகப் பயன்படுத்துமாறு டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன வலியுறுத்தினார்.
Google Gemini: இலங்கை மாணவர்களுக்கு இலவச AI வசதி – அமைச்சர் எரங்க வீரரத்ன அறிவிப்பு
5