Home » Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்

Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்

by newsteam
0 comments
Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்

பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் போது Paye tax தொடர்பில் அவர் வௌியிட்ட விடயம் கீழே தரப்பட்டுள்ளது.”நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, ​​​​எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது.மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது.மேலும், தனிநபர் வருமான வரியின் 1ஆவது வகையின் திருத்தத்தை 500,000 முதல் 10 இலட்சம் ரூபா வரையில் 6% வரிக்கு உட்பட்டதாக மாற்ற முடிந்தது.

அதன்படி, மாதம் 150,000 ரூபா சம்பளம் பெறுபவர் 100% வரி விலக்கு. 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

250,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 61% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

300,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 47% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

mc39

350,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 25.5% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த நிவாரணம் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக நிவாரணம் என நாம் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தத்தில் வெற்றி பெற்றோம்.”

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode