Home » Perfume நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Perfume நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

by newsteam
0 comments
Perfume நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

தலவாக்கலை பகுதியில் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நச்சுத்தன்மை வாய்ந்த வாசனை திரவியத்தை நுகர்ந்தன் காரணமாக குறித்த மாணவர்களுக்கு தலைசுற்றல், தலைவலி, குமட்டல் வாந்தி பேதி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பிராந்திய வைத்திசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி தெரிவித்தார். எனினும் மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும் வைத்தியர் தெரிவித்தார்.தலவாக்கலை பகுதியில் இயங்கும் குறித்த தமிழ் பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்கும் ஒரு மாணவர் பாடசாலைக்கு கொண்டு வந்த நறுமண போத்தலை ஏனைய மாணவர்களுக்கும் பூசியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!