சீனாவில் உள்ள பிரபல ஜி யுவான் கோயிலில் உள்ள ஓர் பூனை மக்களை வரவேற்று ஹை-ஃபை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. வித்தியாசமான சம்பவங்கள் முதல் விசித்திரமான நிகழ்வுகள் வரை உலகின் எந்த மூலையில், என்ன நடந்தாலும் அவை அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வெளிச்சத்திற்கு வருகின்றன.அந்த வகையில், சீனாவில் உள்ள கோயில் ஒன்றில் பூனை ஒன்று பக்தர்களை ஹை-ஃபை செய்து ஆசீர்வதித்து வரும் விசித்திரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவின் சுஜோவில் உள்ள ஜி யுவான் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அங்குள்ள பூனையை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இணையத்தில் வைரலாகிவரும் இந்த கோயில் பூனையின் கழுத்தில் ஒரு தங்க நிற சங்கிலியும் அணிவிக்கப்பட்டிருக்கிறது.மக்களை வரவேற்க தன் பாதத்தை நீட்டி ஹை-ஃபை போன்று செய்யும் இந்த பூனையின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வாறு, இந்த கோயில் பூனையிடம் ஆசிர்வாதம் பெறுவதன் மூலம் அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும் என்று நம்பப்படுகிறது. மேலும், உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பூனையை சந்திக்க ஜி யுவான் கோயிலுக்கு வருகை தருவதால், அங்கு நீண்ட வரிசை நிற்பதை காண முடிகிறது.