Home » அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கத் தயார்: ஹமாஸ் தலைவர் திடீர் அறிவிப்பு

அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கத் தயார்: ஹமாஸ் தலைவர் திடீர் அறிவிப்பு

by newsteam
0 comments
அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கத் தயார்: ஹமாஸ் தலைவர் திடீர் அறிவிப்பு

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் தரப்பில் சுமார் 2,000 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 50,000 பேரும் கொல்லப்பட்டனர்.போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.மீதமுள்ள பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அதிபர் டிரம்ப் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், எங்களிடம் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கத் தயார் என அறிவித்துள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலி அல்-ஹய்யா இஸ்ரேலுக்கு போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.ஹமாஸ் அமைப்பிடம் 50-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!