அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் 2 டெல்டா ஏர்லைன்ஸ் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.நேற்று இரவு லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு டெல்டா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில், தரையிறங்கிய மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.இந்த செயல்பாட்டில், இரண்டாவது விமானத்தின் இறக்கை முதல் விமானத்தின் மூக்கில் பலமாக மோதியது. இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது.விமானம் மிக மெதுவாக நகர்ந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் ஒரு விமான பணியாளர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க லாகார்டியா விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதின – இறக்கை உடைப்பு
7