அனைத்து அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள சில முன்மொழிவுகளினால், பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் மங்கள தப்பரேவ தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடவடிக்கைகள், விரிவுரைகள், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அனைத்தும் ஸ்தம்பிதம் அடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.