Home » அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடலில் ஊசி – அகற்ற முடியாது என்கிறது சீன வைத்தியசாலை

அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடலில் ஊசி – அகற்ற முடியாது என்கிறது சீன வைத்தியசாலை

by newsteam
0 comments
அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடலில் ஊசி - அகற்ற முடியாது என்கிறது சீன வைத்தியசாலை

சீனாவில் அன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் ஒருவருக்குக் கல்லீரல் புற்றுநோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடலில் ஊசி ஒன்று சிக்கியிருப்பதாக மருத்துவமனை அவரின் குடும்பத்திடம் தெரிவித்தது.இதையடுத்து அந்த நபரை அவரது மகள் மற்றொரு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார்.அவரின் உடலில் 11 மில்லிமீட்டர் நீளமும் 3 மில்லிமீட்டர் அகலமும் கொண்ட ஊசி வலப்பக்கக் கல்லீரல் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை அகற்றக் குடும்பத்தார் மருத்துவமனையிடம் கேட்டுள்ளனர்.ஆனால் மீண்டுமோர் அறுவைச் சிகிச்சை செய்வது ஆபத்தானது என்றுகூறி மருத்துவமனை மறுத்துவிட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த நபரின் குடும்பத்துக்கும் மருத்துவமனைக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!