இன்றைய ராசிபலன் 4.07.2025, விசுவாசுவ வருடம் ஆனி மாதம் 20 வெள்ளிக் கிழமை, சந்திரனில் இருந்து எட்டாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். சந்திரன் துலாம் ராசியிலும், சுக்கிரன் ரிஷப ராசியிலும் சஞ்சரிக்கக்கூடிய ஆதி யோகம் உருவாகும். சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம், மீனம் ராசியில் பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மகரம், சிம்மம், கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கடின உழைப்பு தேவைப்படும். மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைப்பீர்கள். ஆனால் சிலர் அதை சுயநலமாக நினைக்கலாம். அதை பொருட்படுத்தாமல் உதவி செய்யவும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால் சில வேலைகள் முடிக்க முடியாமல் போகலாம். அக்கம்பக்கத்தில் நடக்கும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சட்ட விஷயங்களில் நல்ல தீர்வு கிடைக்கும்.அதிர்ஷ்டம் 89% சாதகமாக இருக்கும். விநாயகர் வழிபாடு செய்யவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை பேசி தீர்க்க முடியும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதனால் மன அழுத்தம் ஏற்படலாம். இருப்பினும் வேலையை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். யாராவது ஆலோசனை சொன்னால், அதை கவனமாக பரிசீலித்து செயல்படவும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சிப்பீர்கள்.அதிர்ஷ்டம் 81% சாதகமாக இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளை எடுப்பீர்கள். பல கஷ்டங்கள் இருந்தாலும், உங்கள் முடிவுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவைப்படும் உதவியை, கண்டிப்பாக செய்ய முடியும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கலாம். திடீர் லாபம் கிடைக்கும். அதனால் கடன் இருந்தால், அதை அடைக்க முயற்சி செய்யுங்கள்.அதிர்ஷ்டம் 93% சாதகமாக இருக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரும். கோபத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். உங்களை விட மற்றவர்களைப் பற்றி அதிகம் யோசிப்பீர்கள். நிறைய வேலைகள் செய்ய வேண்டிய நிலை இருக்கும் என்பதால் பதட்டமாக இருப்பீர்கள். முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் முடித்து விடுங்கள். நாளைக்கு என தள்ளிப் போட வேண்டாம்.அதிர்ஷ்டம் 77% சாதகமாக இருக்கும். காயத்ரி மந்திரம் சொல்லுங்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வியாபாரிகள் பெரிய ஒப்பந்தம் செய்து மகிழ்ச்சி அடைவார்கள். நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். எதிரிகள் உங்களை ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். ஆனால் உங்கள் திறமையைப் பார்த்து அவர்களே சண்டையிட்டு அழிந்து விடுவார்கள். எதிரிகள், போட்டிகளை எளிதாக சமாளிக்க முடியும். பெற்றோரின் ஆதரவுடன் சிறிய வேலைகளைத் தொடங்கலாம்.அதிர்ஷ்டம் 71% சாதகமாக இருக்கும். லட்சுமி தேவியை வணங்குங்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் வழக்கமான வாழ்க்கையில் மாற்றங்கள் செய்தால், சில பிரச்சனைகள் வரலாம். நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர் ஒருவர் உங்களை பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். எனவே கவனமாக உங்கள் வேலையை செய்வது நல்லது. பிறர் சொல்வதை அப்படியே கேட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பிறகு வருத்தப்பட நேரிடும். உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவார்கள்.அதிர்ஷ்டம் 72% சாதகமாக இருக்கும். விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லுங்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பமான நாளாக இருக்கும். காதலில் இருப்பவர்கள் தங்கள் துணையின் நடத்தையால் மன வருத்தம் கொள்வார்கள். இது இருவரிடையே வாக்குவாதம் ஏற்படலாம். உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். எந்த வேலையையும் கவனமாக திட்டமிட்டு கடின உழைப்புடன் செய்யவும். அப்போதுதான் இன்று வெற்றி பெற முடியும். இன்று உங்கள் ரகசியங்களை வேலையிடத்தில் மறைத்து வைக்க வேண்டும்.அதிர்ஷ்டம் 90% சாதகமாக இருக்கும். துளசிக்கு தண்ணீர் ஊற்றி விளக்கேற்றுங்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். Iன்று பிறருக்கும் உதவி செய்ய தயங்கக் கூடாது. உங்கள் வேலையையும் மற்றவர்கள் வேலையையும் கவனித்து ஒப்பிட்டு பார்ப்பீர்கள். இதனால் தவறு நடக்காமல் தவிர்க்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் பேசி முடிவதால் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குறுகிய தூர பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. பயணங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.அதிர்ஷ்டம் 67% சாதகமாக இருக்கும். ஏழைக்கு அரிசி தானம் செய்யுங்கள்.
தனுசு ராசி பலன்
தனுசுராசிக்காரர்களுக்கு இன்று எந்த வேலையையும் அவசர அவசரமாக செய்யக் கூடாது. அதனால் தவறு நடக்கலாம். முக்கியமான வேலையில் கவனக்குறைவாக இருந்தால், பிறகு வருத்தப்பட நேரிடும். சொத்து வாங்கும் போது, ஆவணங்களை கவனமாக சரிபார்க்கவும். இன்று சொத்து வாங்கும் உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்ப உறுப்பினரிடமிருந்து பரிசு கிடைக்கும்.அதிர்ஷ்டம் 87% சாதகமாக இருக்கும். கோ மாதாவை வழிபடவும்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். நீங்கள் நினைத்தது நடக்கலாம். அதனால் குடும்பத்தில் கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும். யாரையும் குருட்டுத்தனமாக நம்ப வேண்டாம். அவர்கள் உங்கள் நம்பிக்கையை உடைக்கலாம். உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். முன்பு யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அவர்கள் இன்று பணத்தை திருப்பி கேட்கக்கூடும். அதனால் கடனை திருப்பி செலுத்த முயலவும்.
அதிர்ஷ்டம் 77% சாதகமாக இருக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பணி மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் தாய்க்கு உடல்நல பிரச்சனையில் நிவாரணம் கிடைக்கும். அது இன்று சரியாகிவிடும். அதனால் உங்கள் கவலைகள் குறையும். மாணவர்கள் தேர்வு தொடர்பாக நல்ல முடிவு வரலாம். புதிய வாகனம் வாங்கும் ஆசை இன்று நிறைவேறும்.
அதிர்ஷ்டம் 62% சாதகமாக இருக்கும். யோகா பிராணாயாமம் செய்யுங்கள்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர்கள் முன் தன் ஆடம்பரத்தை காட்ட பொருட்களை வாங்க வேண்டாம். இல்லையென்றால் உங்கள் சேமிப்பு கரைந்துவிடும். அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் வீட்டில், மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய நண்பர் உங்களை சந்திக்க வரலாம். வியாபாரிகள் தங்கள் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.அதிர்ஷ்டம் 65% சாதகமாக இருக்கும். துளசிக்கு தண்ணீர் ஊற்றி, விளக்கேற்றி வழிபடவும்.