இன்று செப்டம்பர் 8, திங்கட்கிழமை, மகாளயபட்சம் ஆரம்பம் ஆகிறது. இன்று சந்திரன் கும்ப ராசி, மீனத்தில் உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இன்று மரண யோகம் கூடிய தினத்தில், சூரியன் – புதன் சேர்க்கை நடக்கிறது. இன்று கடகம், சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷ ராசி பலன்
மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவால் உதவிகள் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான சில வாய்ப்புகள் அமையும். இன்று மாலையில் உங்களின் உடல் நலத்தை கவனித்துக் கொள்வது அவசியம். சிலருக்கு உடல் நலம் மோசம் அடையலாம். இன்று உங்கள் செயல்பாடுகளால் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும் என்பதால் நன்மைகள் நடக்கும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு குழந்தைகளின் செயல்பாடுகள் மகிழ்ச்சியை தரும். உங்களின் புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை தொடர்பாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இன்று தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். காதல் வாழ்க்கையில் இனிமையான அனுபவங்களை பெறுவீர்கள். நண்பர்களுடன் நீண்ட தூர பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். இன்று உங்களின் கடவுள் பக்தி அதிகரிக்கும். சுப காரியங்கள் தொடர்பாக பணம் செலவிடுவீர்கள். இன்று புதிய வருமான வழிகள் ஏற்படும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் செயல்பாடுகள் முன்னேற்றத்தை தரும். அரசாங்க வேலை தொடர்புடையவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். வேலை மற்றும் பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். பணப்பற்ற குறை ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று நண்பர்களுடன் பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆலோசனை உங்களுக்கு வெற்றியை பெற்று தரும்.
கடக ராசி பலன்
கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். பெற்றோரின் வழிகாட்டுதல் உங்களுக்கு உதவும். உங்கள் காதல் துணையுடன் நேரத்தை செலவிடவும். இன்று கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டிய நாள். உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள். வணிகம் தொடர்பான பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்களின் வியாபாரம், தொழிலில் நேர்மறையான பலன்கள் எதிர்பார்க்கலாம். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் முன்னேற்றம் ஏற்படும். இது உங்களின் மனதை மகிழ்ச்சியில் வாழ்த்தும். குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க முடியும். வேலை தேடுபவர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் நல்ல செய்திகளை கொண்டு வரும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புகளும், சலுகைகளும் அதிகரிக்கும். எந்த ஒரு சூழலை சமாளிக்க முடியும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்தவர்கள் பணியிடத்தில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று எதிரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சகோதரர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்க இன்று உங்களின் மன அமைதி அதிகரிக்கும். நிதிநிலை மேம்பட கூடிய நாள். குடும்பத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். சிலரின் உடல்நல பிரச்சனை மனக்கவலையை தரும். உங்கள் வசதியை மேம்படுத்திக் கொள்ள பணத்தை செலவழிப்பீர்கள். மற்றவர்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியை சேர்ந்தவர்கள் முன்னேற்றத்திற்கான அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இன்று இந்த விஷயத்திலும் விதிமுறைகள், சட்டதிட்டங்களை பின்பற்றி செயல்படுவது அவசியம். உங்களின் பேச்சு மற்றும் செயல்பாடு இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டிய நாள். உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கவனமாக செயல்படவும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களை விரும்பிய வெற்றியை பெற கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். பணியிடத்தில் சிந்தனையுடன் வேலை செய்யவும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று குடும்ப சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். அதில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு பதவி மற்றும் உரிமைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகள் மீதான அன்பு அதிகரிக்கும். வீட்டில் சௌகர்யத்தை அதிகரிக்கும் விதமாக பொருட்களை வாங்குவீர்கள். பணியிடத்தில் நிலுவையில் உள்ள உங்களின் வேலைகளை முடிக்க முடியும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலையில் கவனம் தேவை. கருத்து வேறுபாடுகளை மறந்து சேர்ந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் செய்யக்கூடிய நபர்கள் அது தொடர்பான பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள். இன்று பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு. வணிகத்தில் புதிய யோசனைகளுடன் செயல்படுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். துணையின் புரிதல் நன்றாக இருக்கும். நிதிநிலை படிப்படியாக மேம்படும். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
மகர ராசி பலன்
மகர ராசியை சேர்ந்தவர்கள் குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. துணையின் ஆதரவால் மன நிம்மதி கிடைக்கும். இன்று உங்களுக்கு கலமையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். உங்கள் உடலில் வலிமையும் உற்சாகமும் நிறைந்திருக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். இன்று நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் பணவரவு அதிகரிக்கும். அத்தியாவசியமான பொருட்களை வாங்க செலவு அதிகரிக்கும். இன்று பணியிடத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படலாம். உங்கள் வேலைகளை நேர்மறையான மனநிலையுடன் செய்து முடிக்கவும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசியை சேர்ந்தவர்கள் வேலையை பொறுமையை காக்க வேண்டிய நாள். அவசரமாக செய்யக்கூடிய வேலைகள் தடைபடுதல் அல்லது தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. இன்று உங்கள் பெற்றோருடன் சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களின் ஆலோசனை தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் வேலை அல்லது திருமணத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மாணவர்கள் படைப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்.
மீன ராசி பலன்
மீன ராசியை சேர்ந்தவர்கள் சிலர் நபர்களிடம் அல்லது நிறுவனத்தில் கடன் வாங்க நினைப்பவர்களுக்கு சாதகமற்ற சூழல் இருக்கும். இன்று மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பாதை அமையும். குடும்பத்தின் சூழ்நிலை இனிமையாக இருக்கும். புதிய திட்டங்களுடன் செயல்பட்டால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். இன்று உங்களின் தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும். மன அமைதியை வேணுவதற்க்கு முயற்சிக்கவும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும்.