Friday, August 15, 2025
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன் - 15-08-2025

இன்றைய ராசி பலன் – 15-08-2025

இன்று ஆகஸ்ட் 15, வெள்ளிக் கிழமை, சுதந்திர தினம். இன்று சந்திரன் மேஷ ராசியில் அஸ்வினி, பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இன்று விருத்தி யோகம் கூடிய சுப தினத்தில், அமிர்த யோகம் கூடிய தினத்தில், கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம். இன்று சிம்மம் உள்ளிட்ட ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

மேஷம் ராசிபலன்

மேஷ ராசிக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பெரிய உறவுகள் ஏற்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் தொடர்பான பேச்சில் நல்ல தகவல் பெறுவீர்கள். இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்வீர்கள். உறவினர்களின் தன்மையை பெறுவீர்கள். அவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். இன்று புதிய விஷயங்களை கற்க முயற்சி செய்வீர்கள். பணம் தொடர்பான விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை முன்னேற்றம் அடையும்.

ரிஷப ராசி பலன்

இன்று உங்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. மருத்துவ துறையில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். வணிகத்துறையில் நல்ல வாய்ப்பு பெறுவீர்கள். என்ற பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்தாலும் அன்பு மகிழ்ச்சி அதிகரிக்க கூடியதாக இருக்கும். உங்கள் கடின உழைப்பால் வெற்றிகரமான நாளாக அமையும். நேரத்தை சரியாக பயன்படுத்திய லாபத்தை அடைவீர்கள்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசிக்கு இன்றைய கடினமான நாளாக இருக்கும். நாளின் ஆரம்பத்தில் சூழல் சாதகமற்றதாக இருக்கும். இன்று உங்கள் வேலைகள் தொடங்குவதற்கு முன் சரியான திட்டங்களுடன் ஆரம்பிக்கவும். இன்று உங்களின் கனவுகள் நிறைவேற கடின உழைப்பு விடாமுயற்சி தேவைப்படும். மாணவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று வணிகத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் பெறுவீர்கள். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். இன்று ஆரோக்கியம் மேம்படும். மன நிம்மதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

கடக ராசி பலன்

கடக ராசிக்கு மிகவும் நல்ல நாளாக அமையும். புதிய உறவுகள் கிடைப்பார்கள். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தையில் நல்ல தகவல் கிடைக்கும். உறவினர்களின் அன்பை பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்களுக்கு விருப்பமான புதிய பொருட்களை வாங்குவதற்கு ஆசைப்படுவீர்கள். ஆராய்ச்சி பணிகளுக்கு நல்ல நேரமாக அமையும். இன்று புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம், சிலரின் ஆலோசனை பெற நினைப்பீர்கள். உங்கள் முயற்சிகளால் லாபம் நடைபெறுகிறது. நிதி விஷயங்களில் நல்ல நாளாக இருக்கும்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசிக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். மன நிறைவு தரக்கூடிய நாளாக அமைய. பழைய முதலீட்டிலிருந்து நல்ல வருமானத்தை பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகள் வெற்றியை தரும். சிலருக்கு வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் பெற வாய்ப்பு உண்டு. நீதிமன்ற வழக்கு சேர்ந்த விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். இன்று காதல் உறவில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறவுகளை மேம்படுத்துவதற்கான நல்ல நாளாக இருக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியை கடினமான நாளாக இருக்கும். இன்று பல சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. வேலையில் கவனமாக இருக்கவும். உங்கள் பணிகளை முடிக்க கடின உழைப்பு மற்றும் திட்டமிடல் தேவைப்படும். ஒன்று உங்கள் செயல்பாடுகளில் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உடல்நலம் சார்ந்த சிந்தையில் கவனம் தேவை. சிலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். காதல் விஷயத்தை துணையை புரிந்து கொண்டு நடக்கவும்.

இதையும் படியுங்கள்:  இன்றைய ராசி பலன் - 17-05-2025

துலாம் ராசி பலன்

துலாம் ராசிக்கு மிகவும் நல்ல நாளாக அமையும். உங்கள் வாழ்க்கையில் பல பொன்னான வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று நீண்ட நாள் கனவு நனவாகும். கடின உழைப்பிற்கான பலனை நிச்சயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். இன்று தொழில் தொடர்பாக சில ஒப்பந்தங்களைப் பெற அலைச்சல் வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்களை தேடி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகவும் பயன்படுத்திக் கொள்ளவும். இன்று உங்கள் செயல்பாடுகளில் தனித்துவம் இருக்கும். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசிக்கு இன்று கடினமான நாளாக அமையும். சவால்களை எதிர்கொண்டு வெற்றியடைவீர்கள். இன்று உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். கோபம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் எண்ணங்களை தெளிவாக வைத்திருக்கவும். போட்டியாளர்களை சமாளிக்க வேண்டிய நாள். இன்று உங்களின் பொருளாதார நிலை சற்று குறைவாக இருக்கும். செலவுகளை நிர்வகிக்கவும். இன்று கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்கு சிறப்பான நாளாக அமையும். புதிய செயல் திட்டங்களை பங்கேற்க அல்லது பொறுப்பேற்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் செயலை உற்சாகம், ஆர்வம் நிறைந்திருக்கும். பங்கு சந்தை முதலீடு சார்ந்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று காதலில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்காலம் நினைத்து அதிகம் சிந்திப்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும். இன்று ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளவும்.

மகர ராசி பலன்

மகர ராசிக்கு சவால் நிறைந்த நாளாக இருக்கும். இன்று சில ஏமாற்றத்தை சந்திக்க வாய்ப்பு உண்டு. உங்கள் மனவலிமையால் அனைத்து தடைகளையும் சமாளித்து முன்னேற முடியும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குறிப்பாக உணவு செய்து கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் காதல் நிறைந்திருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். இன்று உங்களின் செயல்பாடுகள் பாராட்டை பெற்று தரும். முக்கிய பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசிக்கு இன்று சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் வேலையில் வெற்றி பெற சில சிரமங்களை எதிர்கொள்வீர்கள். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் பெற காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். இன்று உங்கள் உறவினர்களிடமிருந்து சிறப்பு பரிசு கிடைக்கலாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கையில் அன்பும், ஆதரவும் நிறைந்திருக்கும். இன்று அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். அரசு வேலைக்கு தயாராகக்கூடிய நபர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

மீன ராசி பலன்

மீன ராசிக்கு சிறந்த நாளாக அமையும். அன்றாட வேலைகளை எளிதாக செய்து முடிக்க முடியும். இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சில மனஸ்தாபம் ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் அன்பு நிறைந்திருக்கும். இன்று உங்கள் வேலையை உற்சாகமாக செய்வீர்கள். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராகக்கூடிய நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!