Tuesday, August 19, 2025
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன் - 19-08-2025

இன்றைய ராசி பலன் – 19-08-2025

இன்று செவ்வாய் கிழமை, 2025 ஆகஸ்ட் 19ம் தேதி திரிபுஷ்கர யோகம் நிறைந்த இன்று, மிதுனத்தில் சந்திரன் இருக்கிறார். குரு, சந்திரன், சுக்கிரன் சேர்க்கை 12 ராசிகள் மீது தாக்கம் ஏற்படுத்தும். இன்று விருச்சிக ராசியில் விசாகம், அனுஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.

மேஷம் ராசிபலன்

மேஷ ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும். வாழ்க்கையில் மறக்க முடியாத சில நல்ல நிகழ்வுகள் நடக்கும். உங்களின் நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறலாம். மனதிற்கு மகிழ்ச்சியான சூழல் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்களின் திட்டங்களை முடிக்க மும்மரமாகச் செயல்படுவீர்கள். உங்களின் திட்டமிட்ட வேலை வெற்றியை தரும். மாணவர்கள் தங்கள் படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்களின் மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் ரகசியங்களை பாதுகாக்கவும். இன்று உங்களின் செயலால் பெருமை அடைவீர்கள்.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசிக்கு கலையான பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலையில் சில தொந்தரவுகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சிக்கல்களை சந்திக்க நேரிடும். அன்புக்குரியவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படவும். உங்கள் வேலை தொடர்பாக சரியான திட்டம் உடலுடன் செயல்படவும். இன்று நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் குறைவாகவே கிடைக்கும். வேலையில் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையுடன் செயல்பட வேண்டிய நாள். வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. மேலதிகாரிகளின் ஆலோசனை உங்களுக்கு உதவும்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்கள் வேலைகளை முடிக்க தேவைப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்களை சுற்றி உள்ள சூழல் உங்கள் மனதிற்குப் புத்துணர்ச்சியைத் தரும். உங்கள் வேலை, தொழில் தொடர்பாக நிதானமாக சிந்தித்து முடிவெடுக்கவும். இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். நிதி சார்ந்த நன்மைகள் அதிகரிக்கும்.

கடக ராசிபலன்

கடக ராசிக்கு கடினமான நாளாக இருக்கும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்த நிதானமாக செயல்படவும். நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் தாமதம் ஏற்படும் என்பதால் மனதளவில் சோர்வு அடைவீர்கள். இன்று திட்டமிடல்களில் நம்பிக்கை உடன் செயல்படுவதால் நல்ல பலன் கிடைக்கும். இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செய்து விட வாய்ப்பு பெறுவீர்கள். சமூக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய நாள். இன்று காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்த செல்வது நல்லது.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசிக்கு கடினமான நாளாக அமையும். உங்கள் பிரச்சனைகளையும் சமாளிக்க திட்டமிடலும், கடின உழைப்பும் தேவைப்படும். தொழில் தொடர்பாக சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நீங்கள் எதிர்பாராத வாய்ப்பு வசதிகளை பெறுவீர்கள். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நிதி நிலை மேம்படுத்த முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசிக்கு சிறந்த நாளாக அமையும். உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சிலர் நல்ல நிகழ்வுகள் நடக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் செயல்பாடுகளில் நேர்மறையான சிந்தனை தேவை. உங்கள் வேலைகளை முடிக்க மும்முரமாகச் செயல்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். இன்று சமூக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று நீங்கள் செய்யும் பயணங்கள் அணுகுல பலனைத் தரும்.

இதையும் படியுங்கள்:  ரஷியாவில் கரை ஒதுங்கிய சீன சரக்கு கப்பல்

துலாம் ராசி பலன்

துலாம் ராசிக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலைகள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலனை எதிர்பார்க்கலாம். எதிரிகளிடம் இருந்து விலகி இருக்கவும். இன்று உங்கள் மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும். உங்கள் பேச்சு நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் சர்ச்சைகள் நீங்கும். இன்று சிலருக்கு பண பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உண்டு. நிதி சார்ந்த விஷயங்களை கவனம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம் ராசிபலன்

விருச்சிக ராசிக்கு மிகவும் கடினமான நாளாக அமையும். உங்கள் வேலைகளை முடிக்க தாமதம் ஏற்படும் என்பதால், இன்று உங்கள் வேலை, தொழில் தொடர்பாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது. இன்று தேவையற்ற செலவுகள் உங்கள் தொந்தரவு செய்யும். முடிந்தவரை செலவுகளை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சிறிய வேலைகளை கூட சரியாக செய்து முடிப்பது நல்லது. எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. சிலர் உங்கள் மீது பழியை சுமத்த வாய்ப்பு உண்டு. இன்று பட்ஜெட் போட்டு செயல்படவும். ஆரோக்கியத்தில் செலுத்துவது நல்லது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்கு ஒரு நாள் சாதகமானதாக இருக்கும். முதலீடுகள் மூலம் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சொந்த உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று வருமானம் அதிகரிக்கும். சொத்து தொடர்பான வழக்குகளில் உங்கள் உரிமையை நிலை நாட்ட முடியும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கையில் துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபடாமல், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆரோக்கியமான உணவு பழக்கத்தைப் பராமரிக்கும் முயற்சி செய்யவும்.

மகர ராசி பலன்

மகர ராசிக்கு அற்புதமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் பெரிய வெற்றியை பெறலாம். தொழில் தொடர்பாக சாதகமான சூழல் இருக்கும். உங்களின் வாக்கு வன்மை அதிகரிக்கும். இன்று உங்கள் வேலையை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். இருப்பினும் எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் எதிர்பார்த்த நன்மை பெறுவீர்கள். மேற்படிப்புக்கான முயற்சி வெற்றி தரும். இன்று ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனமும் செலுத்தவும்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசிக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்களுக்கு நிறைய நன்மைகள் சேரக்கூடிய நாள். உங்கள் வேலை மற்றும் வணிகம் தொடர்பாக பணம் சேரும். அலுவலகத்தில் வேலையை சரியாக செய்து முடிக்க முடியும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண தொடர்பான நல்ல செய்திகளை கிடைக்கும். இன்று உங்களின் கனவுகள் நிறைவேறும். பண பற்றாக்குறை இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலும், சில நல்ல வாய்ப்புகளும் சேரும்.

மீனம் ராசி பலன்

மீன ராசிக்கு கடினமான நாளாக இருக்கும். அன்றாட வேலைகளை முடிப்பதில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. உங்கள் வேலையில் விடாமல் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிப்பது நல்லது. உணவு மற்றும் ஆரோக்கியத்தை கவனம் செலுத்தவும். நீண்ட நாள் உடல்நல பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். இன்றும் உங்கள் உறவுகளை அனுசரித்து செல்லவும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட முடியும். கடின உழைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!