இன்று குரு அருள் கிடைக்கும் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 21ம் தேதி, கடகத்தில் சந்திரன் நுழைகிறார். இன்று மாத சிவராத்திரி உள்ள தினத்தில், தனுசு ராசியில் உள்ள கேட்டை, மூலம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. கிரகங்களின் சேர்க்கையால் நன்மை அடைய உள்ள ராசிகளை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசிபலன்
மேஷ ராசிக்கு கடினமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கலாம். நிதிநிலை சற்று சவால் தரக்கூடியதாக இருக்கும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. உடல் நலம் தொடர்பான பின்னடைவு உங்கள் வேலையை முடிப்பதில் சற்று தாமதத்தை ஏற்படுத்தும். இன்று உங்களின் நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு உங்களுக்கு உதவும் காதல் உறவில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்கு மிகவும் சிறப்பாக நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் உற்சாகம் மற்றும் வெற்றி கிடைக்கக்கூடியதாக இருக்கும். வாழ்க்கையில் புதிய வளங்கள் சேர வாய்ப்பு உண்டு. உங்கள் வேலையில் பதவி அல்லது சம்பளம் உயர்வு கிடைக்கலாம். இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கலாம். சொத்து தொடர்பான நல்ல சூழல் நிலவும். நீதிமன்றம் வழக்குகள் சாதகமான பலன்கள் தரும். இன்று உங்கள் மனதில் காதல் மலர வாய்ப்பு உண்டு.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்கு இன்று மோசமான நாளாக இருக்கும். அன்றாட வேலைகளில் சில சிக்கல்கள் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கிய பிரச்சனையால் வேலைகள் முடிப்பதில் தாமதம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் காதல் நிறைந்திருக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வேலைகளை மும்முரமாகச் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். அரசு தொடர்பான வேலையில் முன்னேற்றம் ஏற்படும். இன்று அதிக உற்சாகத்தில் முடிவுகள் எடுப்பது அல்லது வேலைகளை செய்வதை தவிர்க்கவும்.
கடக ராசி பலன்
கடக ராசிக்கு கொஞ்சம் கடினமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இன்று உங்கள் வேலையில் ஊழியர்கள், நீண்ட மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவு குறைவாகவே கிடைக்கும். இன்று உங்கள் உறவுகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. அதே சமயம் இன்று உங்கள் உணவு சார்ந்த செயல்களில் கவனம் செலுத்தவும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் பணிகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். உறவுகள் மேம்படும். நண்பர்கள் உடன் நேரத்தை செலவிட முடியும். ஆரோக்கியத்தில் இருந்து ஒரு பெரிய பிரச்சினை இருக்காது. புதிய திட்டத்தின் கீழ் செயல்பட முயற்சி செய்வீர்கள். உங்களின் வருமானம் அதிகரிக்கும். அதனால் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை இப்படி உயரங்களை அடைய வாய்ப்பு உண்டு. இன்று உங்களின் ஆரோக்கியம் மேம்படும் வெற்றி அதிகரிக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு மிகவும் சிறப்பான நாளாக அமையும். புதிய திட்டத்திற்கு பொறுப்பேற்க வாய்ப்புகள் உண்டு. வேலை தொடர்பாக ஆற்றலுடன் செயல்படுவீர்கள். பங்குச் சந்தையின் முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். வணிகத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காதல் துணையுடன் விருந்துக்கு செல்ல வாய்ப்பு உண்டு. இன்று குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் திட்டங்களை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண உறவு மேம்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்கு கடினமான நாளாக அமையும். உங்கள் செயலில் கவனம் செலுத்துவோம். உங்கள் பேச்சு நிதானத்தை கடைப்பிடிப்பதோடு, செயலில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி குவியம். இன்று வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணியிட அரசியலில் இருந்து விலகி இருக்கவும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க அதிகமாக செலவிடுவீர்கள்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசிக்கு சில பிரச்சனைகளை சந்தித்தாலும் உங்கள் வேலை தொடர்பாக வெற்றிகள் அதிகரிக்கும். எதிரிகளின் விஷயத்தில் கவனமாக இருக்கும். இன்று எல்லாவற்றிற்கும் எதிர்வினை ஆற்ற வேண்டாம். செயலில் திட்டமிடலும், நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. இன்று மாணவர்கள் படிப்பு தொடர்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். புற்றுநர்ச்சியுடன் செயல்படுவார்கள். இன்று உங்கள் எண்ணங்களில் நேர்மறையான சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. உங்களின் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு பணியிடத்தில் சிறப்பான வெற்றியை பெறலாம். உங்கள் கனவுகள் நிறைவேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் வாழ்க்கையில் பல பொன்னான வாய்ப்புகள் சூழ்ந்திருக்கும். இன்று உங்களது பேச்சு, செயல்பாடுகளை நிதானத்தை கடைப்பிடிக்கவும். உங்கள் வேலையில் கடின உழைப்பு தேவைப்படும். இன்று பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. இந்த கடன் வாங்குவது, கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். இன்று கடின உழைப்பின் மூலமே நீங்கள் நினைத்த விஷயத்தை அடைய முடியும்.
மகர ராசி பலன்
மகர ராசிக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கையில் சில மறக்க முடியாத அனுபவங்களை பெறுவீர்கள். நீண்ட காலம் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் மனம் மகிழ்ச்சி நிறையும். குடும்ப விஷயங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். படிப்பு தொடர்பான நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். சமூக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். இன்று காதல் வாழ்க்கையில் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. வேலைகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்கு கொஞ்சம் கடினமான நாளாக இருக்கும். உங்கள் அன்றாட வேலைகளை முடிக்க பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உறவினர்களிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.இன்று ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். இன்று உங்கள் குடும்பத்தினரை மற்றும் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் வேலைகளை முடிப்பதில் மும்முரமாகச் செயல்படுவீர்கள். அரசு வேலைக்கு தயாராகக்கூடிய நபர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று பட்ஜெட் போட்டு செயல்பட வேண்டிய நாள்.
மீன ராசி பலன்
மீன ராசிக்கு ஊக்கமளிக்கக் கூடிய நாளாக இருக்கும். இன்று பணம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. இன்று குடும்பத்தினர் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் தேவை. சிலர் பணி தொடர்பான அழுத்தம் அதிகரிக்கும். வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கும் முயற்சி செய்யவும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.