இன்றைய ராசி பலன் (ஜூலை 29, 2025 செவ்வாய்க் கிழமை) இன்று வளர்பிறை, சந்திரன் கன்னி ராசியில் நகம் இருக்கிறார். இன்று நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று மகரம் கும்ப ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய சந்திராஷ்டம தினம்
மேஷம் ராசிபலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் சாதகமற்ற நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். அதனால் அதிக மன அழுத்தத்துடன் நாள் தொடங்கலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வாக்குவாதங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். இன்று முதல், சில நாட்களுக்கு உங்கள் செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, உங்கள் செயலில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். இன்று நீங்கள் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.
ரிஷபம் ராசிபலன்
ரிஷப ராசிக்கு இன்று நல்ல தொடக்கமாக அமையும். உங்கள் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் வேலை, தொழில் தொடர்பாக நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கடினமான உழைப்பு தேவைப்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் சிறிது நேரம் கூட ஓய்வு கிடைக்காமல் இருக்கும். இன்று உங்களின் ஆரோக்கியத்தை கவனம் செலுத்தவும். உங்கள் குடும்பம், வேலை தொடர்பாக சமநிலையை பராமரிக்க சிரமப்படுவீர்கள்.
மிதுனம் ராசிபலன்
மிதுன ராசிக்கு இன்று உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் கவனமாக அதை கையாளவும். இன்று ஆன்மீக சிந்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். கடினமான சூழல் நிலவும் என்பதால் பிறரிடம் தொடர்பு கொள்ள இயலாத சூழல் இருக்கும். இன்று காதல் விஷயத்தில் உணர்ச்சிவசப்பட வேண்டாம். நிதானமான பேச்சு தேவை. உங்கள் வேலை தொடர்பாக திட்டமிடலும், புத்திசாலித்தனமும் தேவைப்படும்.
கடகம் ராசிபலன்
கடக ராசிக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். தனிமையில் உள்ளவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்களின் பரஸ்பர கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
வணிகம் தொடர்பான விஷயங்களில் தேவையற்ற இழப்புகளை பணம் தந்த விஷயத்தில் கவனம் தேவை. முதலீடு விஷயத்தில் நிதானமா அவசியம். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதி விஷயங்களில் திட்டமிட்டு செயல்படவும்.
சிம்மம் ராசிபலன்
சிம்ம ராசிக்கு வெற்றி தேடி வரக்கூடிய நாள். உங்களின் ஆரோக்கியம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் சாதகமாக இருக்கும். உணர்ச்சிவசப்பட வேண்டாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலை தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும். பண நன்மைகள் கிடைக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் செலவுகள் செய்வீர்கள். உங்கள் வேலையில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினருடன் நேரம் செலவிட வாய்ப்பு குறைவாகவே கிடைக்கும்.
கன்னி ராசிபலன்
கன்னி ராசிக்கு வேலைகள், குடும்ப வாழ்க்கையில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் இன்று உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் வேலை பாதிக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும். சிலர் பணத்தை வீணடிக்கும் அபாயகரமான செயல்களில் ஈடுபடுவார்கள். உங்கள் இலக்கை அடைய முயற்சி செய்யவும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் உண்டு. உங்களின் சூழ்நிலையை பொறுமையாக கையாளுவது நல்லது.
துலாம் ராசிபலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கான மரியாதை பெறுவீர்கள். இன்று யாரையும் எளிதாக நம்ப வேண்டாம். உங்கள் முக்கிய முடிவுகளை நீங்களே எடுக்கவும். பிறரின் செயல்பாடுகளுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம். இன்று கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. உங்களின் மனவலிமை அதிகரிக்கும். மன அமைதியும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
விருச்சிகம் ராசிபலன்
விருச்சிக ராசிக்கு பலவகை எண்ணங்கள் மனதில் ஏற்படும். இதனால் மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக கையாளவும். உங்கள் வேலைகளை சரியான விதத்தில் கவனமாக செய்து முடிக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். என்ற அனைத்து வகையான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறும் வகையில் சிந்திப்பீர்கள். இன்று. உங்கள் எண்ணங்களை நேர்மறையாக வைத்திருக்கவும். இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும்.
தனுசு ராசிபலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு, இன்று ஒழுக்கத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய நாள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்குவது அவசியம். கடினமாக உழைக்க வேண்டிய நாள். வணிகம் தொடர்பான முதலீடுகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலைகள் அர்ப்பணிப்புடன் செயல்படவும். சொத்து தொடர்பாக சில சமரசம் செய்ய வேண்டியது இருக்கும். உங்கள் கருத்துக்களை தெளிவாகவும், சுருக்கமாகவும் வெளிப்படுத்தவும். காதல் வாழ்க்கையில் உறவு மேம்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்கவும்.
மகரம் ராசிபலன்
மகர ராசியை சேர்ந்தவர்கள் இன்று வேலையில் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள். இன்று உறவினர்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். இன்று வேலை தொடர்பாக செயல்படு முன்னேற்றத்தை தரும். உங்கள் வார்த்தைகளை சிந்தனையுடன், தெளிவாக பயன்படுத்தவும். இல்லை எனில் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். இன்று அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பொழுதுபோக்குக்காக அதிக பணம் செலவிடுவீர்கள். இன்று திருமணம் தொடர்பான திட்டங்கள் குறித்து நல்ல தகவல் வரும். உங்களுக்கு விருப்பமான சில வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.
கும்பம் ராசிபலன்
கும்ப ராசிக்கு இன்று மிகவும் நல்ல நாளாக அமையும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். நிதிநிலை தொடர்பாக நன்மை அடைவீர்கள். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். குறிப்பாக உங்கள் பேச்சில் கட்டுப்பாடு தேவை. அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்கவும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று பொழுதுபோக்கு, வீண் செலவு தொடர்பாக உங்கள் நிதிநிலை குறைய வாய்ப்பு உண்டு. இன்று எந்த ஒரு பெரிய செலவையும் நிறுத்தி வைப்பது நல்லது.
மீன ராசிபலன்
மீன ராசி சேர்ந்தவர்களுக்கு வேலையில் வெற்றியை பெற கடின உழைப்பு தேவைப்படும். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பான விஷயத்தில் சிரமங்களை எதிர்கொள்வீர்கள். இன்று உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். இலக்கை அடைய உற்சாகத்துடன் செயல்படவும். குடும்பம் அல்லது காதல் தொடர்பாக அன்பு கூறி அவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. இன்று உறவில் நெருக்கம் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.