இலங்கையின் 77வது சுகந்திரதின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது.பாண்ட் வாத்திய இசை அணிவகுப்புடன் உத்தியோகத்தர்கள் அழைத்து வரப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.தொடர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்-முரளிதரன் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.