Thursday, February 6, 2025
Homeஇலங்கைஎச்சரிக்கையை மீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் கட்டைக்காடு மீனவர்கள்

எச்சரிக்கையை மீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் கட்டைக்காடு மீனவர்கள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களுக்கு சட்டவிரோத தொழிலில் ஈடுபட வேண்டாமென நீரியல்வளத்துறை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சட்டவிரோத தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.கடந்த நான்கு நாட்களாக சட்டவிரோத தொழிலாளர்கள் ஒளிவைத்து பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்களை சட்டவிரோதமாக பிடித்துவருவதுடன் பாவனைக்கு உதவாதென கூறி பெரும் தொகையான சிறிய மீன்களை கடலில் வீசிவிட்டு வருவதாக கூறப்படுகிறது.கடந்த வருடமும் வடமராட்சி கிழக்கில் சுருக்குவலை தலை தூக்கிய போதும் சட்டவிரோத சுருக்குவலை தொழிலாளர்களை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை.இந்த புதிய அரசாங்கத்தில் வடமராட்சி கிழக்கில் மீண்டும் சட்டவிரோத சுருக்குவலை தொழில் தலை தூக்கியுள்ளதால் மீன்பிடி அமைச்சர் விரைந்து இவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

இதையும் படியுங்கள்:  ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!