Saturday, March 1, 2025
Homeஇலங்கையாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் - ஜனாதிபதியிடம் அரச அதிபர் சுட்டிக்காட்டு

யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் – ஜனாதிபதியிடம் அரச அதிபர் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேச செயலக பிரிவுவாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன. எனவே இந்த புகையிரத கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்.யாழில் நேர அட்டவணைக்கு ஏற்ப 38 புதிய பேருந்துகள் தேவையாக உள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் சாலைக்கு 23 பேருந்துகளும், பருத்தித்துறை சாலைக்கு 10 பேருந்துகளும், காரைநகர் சாலைக்கு 05 பேருந்துகளும் தேவையாக உள்ளன.யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. யாழில் 06 வீதி சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன. எனவே வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞைகளை அமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் - ஜனாதிபதியிடம் அரச அதிபர் சுட்டிக்காட்டுயாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் - ஜனாதிபதியிடம் அரச அதிபர் சுட்டிக்காட்டு

இதையும் படியுங்கள்:  உருவாகிறது Gen Beta எனும் புதிய தலைமுறை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!