வவுனியா – சிதம்பரபுரம் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிடயுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்யப்பட்டதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஆவார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.