Home » இலங்கையில் திரிபோஷா கப்கேக் அறிமுகம்

இலங்கையில் திரிபோஷா கப்கேக் அறிமுகம்

by newsteam
0 comments
இலங்கையில் திரிபோஷா கப்கேக் அறிமுகம்

இலங்கை திரிபோஷ லிமிடெட் நிறுவனம் இப்போது மீண்டும் ஒரு வெற்றிகரமான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்காக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் மீண்டும் 24 மணி நேரமும் இயங்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் புதிய தலைவர் அமல் நிரோஷன அத்தநாயக்க கூறுகிறார்.கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷாவை மீண்டும் கொடுக்கலாம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், திரிபோஷா நிறுவனம் பல்வேறு சுவைகளில் சத்தான மற்றும் சுவையான திரிபோஷா கப்கேக் (Cup Cake) தயாரிப்பை அறிமுகப்படுத்த உள்ளது.சொக்லேட், வாழைப்பழம், வெண்ணிலா, ஸ்ட்ராபெரி மற்றும் மாம்பழ சுவைகளில் திரிபோஷா Cup Cake கள் தயாரிக்கப்படவுள்ளன.நிறுவனத்தின் ஜா-எல தலைமை அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் இருந்து நுகர்வோர் பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தலைவர் அமல் நிரோஷன அத்தநாயக்க தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!