Home » இலங்கையில் மதுபாவனம் குடிப்பதால் தினமும் 50 பேர் உயிரிழப்பு

இலங்கையில் மதுபாவனம் குடிப்பதால் தினமும் 50 பேர் உயிரிழப்பு

by newsteam
0 comments
இலங்கையில் மதுபாவனம் குடிப்பதால் தினமும் 50 பேர் உயிரிழப்பு

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தில் மதுசாரத்திற்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மது பாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைப்பதற்கும், மது பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் விரைவான திட்டமொன்று தேவை’ என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது,வருடாந்தம் மது பாவனையினால் சுமார் 03 மில்லியன் பேர் அகால மரணமடைகின்றனர். உலகளாவிய ரீதியில் ஏற்படுகின்ற தடுக்கக்கூடிய 10 மரணங்களுள் 08 மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான நான்கு பிரதான காரணங்களில் மது பாவனை முன்னனி காரணியாகும் என்று குறிப்பிட்டுள்ளது.இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 83 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன, மது பாவனையினால் தினமும் சுமார் 50 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள், மேலும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20,000 இலங்கையர்கள் அகால மரணமடைகிறார்கள். இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மதுசார பாவனை ஒரு முக்கிய காரணியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!