இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்ட காஸாவின் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகளும், அதன் விவசாய நிலங்களின் வளத்தை மீளக்கட்டியெழுப்ப 25 ஆண்டுகளும் ஆகலாம் என, ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி நேற்றுடன்(7) இரு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை காஸாவில் இடம்பெற்றுள்ள சேத மதிப்பீடு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இஸ்ரேலிய தாக்குதலினால் காஸாவில் இடிந்து விழுந்துள்ள இடிபாடுகளை அகற்றுவது, ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில், 500 தொன்களுக்கும் அதிகமான குப்பைகள் குவிந்துள்ளன. காஸாவில் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள் ஆகும்.போர் இடம்பெற்றதனால் காஸாவிலுள்ள 15,000 ஹெக்டேயர் வளமான நிலத்தில், 232 ஹெக்டேயர் மட்டுமே மீதமுள்ளன. 98.5 சதவீதம்நிலம் தரிசாக மாறிவிட்டன .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலால் சிதைந்த காஸா – மீளக்கட்டியெழுப்ப 25 ஆண்டுகள் தேவை
18