Home » ஓட்டமாவடி அரபா நகர், மஜ்மா நகர் பிரதேசங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுங்கள் – எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

ஓட்டமாவடி அரபா நகர், மஜ்மா நகர் பிரதேசங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுங்கள் – எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

by newsteam
0 comments

மட்டக்களப்பு அரபா நகர், மஜ்மா நகர் பிரதேச மக்களுக்கு இதுவரை குடிநீர் வசதி கிடைக்கவில்லை. நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சந்திவெளி திட்டம் முடிவடைந்தவுடன் குடிநீர் வழப்படும் என உறுதி வழங்கியிருந்தனர் ஆனால் தற்போது சந்திவெளி நீர் திட்டம் முடிவடைந்த நிலையிலும் இந்த அந்த கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை இவற்றை கருத்திற்கொண்டு உடனடியாக குடிநீர் வசதிகளை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்விடுத்தார்.திங்கட்கிழமை (30) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே இக்கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பிராந்திய பொறியியலாளர், தற்போது சந்திவெளி குடிநீர் திட்டம் முடிவடைந்தாலும் குடிநீர் பாசிக்குடா ஹோட்டல்களுக்கு வழங்கப்படுவதால் நீரின் அழுத்தம் போதாமையுள்ளது இதனால் குடிநீரை இப்பிரதேச மக்களுக்கு வழங்க முடியாமல் இருப்பதாகதெரிவித்தார்.இதனைதொடர்ந்து கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், இக் கிராம மக்களுக்கு கிணற்றிலிருந்தும் கூட நீர் பெற முடியாத நிலை காணப்படுகிறது. மக்களுக்கு நீர் வசதிகளை வழங்குவது உங்களது கடமை, உடனடியாக இந்த கிராமங்களுக்கு குடீநீர் வழங்குங்கள் என தெரிவித்ததையடுத்து மாவட்ட அபிவிருத்திகுழு இதனை ஏற்றுக்கொண்டு இக்கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீர் வசதிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பிராந்திய பொறியியலாளருக்கு பணிப்புரை வழங்கியது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!