கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் இருந்து 16 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.அதன்படி, 16.84 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு வருகை தந்த ஒருவர் இந்த பொதிகளைப் பார்த்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது.