கனடாவின் டொராண்டோ நகரிலுள்ள விமான நிலையத்தில் டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் சிக்கி 17 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் தெரிவிக்கின்றன.மினியாபோலிஸில் இருந்து காலை 11.47 மணியளவில் புறப்பட்ட டெல்டா விமானம் கனடாவின் டொராண்டோவில் பனிமூட்டமான ஓடுபாதையில் அதிக பனிமூட்டம் காரணமாக தரையிறங்கும் போது தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.விபத்தின் போது விமானத்தில் 76 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் – 17 பேர் காயம் ; 3 பேர் ஆபத்தான நிலையில்
By newsteam
0
147
RELATED ARTICLES