Home » கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் மா மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர் கைது

கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் மா மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர் கைது

by newsteam
0 comments
கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் மா மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர் கைது

வழக்கில் முன்னிலையாக கம்பஹா நீதிமன்றத்துக்கு வந்த இளைஞர் ஒருவர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள மா மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.தன்னை கைது செய்யவோ அல்லது வழக்கு தொடரவோ கூடாது என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.நேற்று (24) மதியம் இந்த சம்பவம் நடந்ததாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த இளைஞரை மரத்திலிருந்து கீழே இறக்கிய காவல்துறையினர் அவரை கைது செய்ததாகவும் அறியமுடிகிறது. அந்த இளைஞர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அவருக்கு எதிராக ஏலவே கொழும்பு – முகத்துவாரம், கிராண்ட்பாஸ் மற்றும் கம்பஹா காவல்துறையினரால் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!