காசாவில் உணவுக்காக காத்திருந்த 35 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று காலை முதல் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 70 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களில் அரைவாசி பகுதியினர் உணவுக்காகக் காத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை, இன்றைய நாளில் மாத்திரம் 90 தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.