மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவானது.கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இன்று (29) ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மது போதையில் அப்பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி வெளியில் எடுத்த பொழுது மீண்டும் குளத்தில் பாய்ந்துள்ளார்.பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கணேசமூர்த்தி ரமேஷ் எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போனவர்.பல மணி நேரம் மேலே வராத நிலையில், அப்பகுதி இளைஞர்களால் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
7
previous post