குருநாகலில் பேருந்து விபத்தைத் தடுக்கவும், மாணவிகளின் உயிரைக் காப்பாற்றவும், சாதூர்யமாக செயற்பட்ட, பாடசாலை பேருந்தின் நடத்துனர் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை நிர்வாகம் இந்த விருதை வழங்கியுள்ளது. மாணவிகளை ஏற்றிச் செல்லும் போது, பேருந்தின் ஓட்டுநர் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது, நடத்துனர் உடனடியாக செயற்பட்டு, வாகனத்தை இடதுபுறமாகத் திருப்பி, மின்சார கம்பத்தில் மோதச்செய்துள்ளார்.இந்த செயற்பாட்டை அவர் மேற்கொள்ளாதிருந்தால், குறித்த பேருந்து வலதுபுறத்தில் உள்ள பாரிய பள்ளத்தாக்கில் வீழ்ந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.