Home » குருந்தூர் மலை பகுதியில் கைதாகிய இரண்டு விவசாயிகளும் விடுவிப்பு

குருந்தூர் மலை பகுதியில் கைதாகிய இரண்டு விவசாயிகளும் விடுவிப்பு

by newsteam
0 comments
குருந்தூர் மலை பகுதியில் கைதாகிய இரண்டு விவசாயிகளும் விடுவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளின் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது.இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களான விவசாயிகள் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையாக்கியுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த. பிரதீபன் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு தொடுனர்கள் சார்பில் முல்லைத்தீவு பொலிஸார் தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சட்டத்தரணி ஒருவரும் ஆஜராகி இருந்தனர்.இதேவேளையில் சந்தேக நபர்கள் சார்பாக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த 12க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.நீதிபதி அவர்கள் தனது கட்டளையில் விசேடமாக, குறித்த சந்தேகநபர்கள் மீது வழக்கை தொடர்ந்து நடாத்தக்கூடிய அடிப்படை முகாந்திரங்கள் இல்லை எனவும், குறித்த பிரதேசம் இன்னமும் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய பிரதேசம் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத்தொடுனர் தரப்பே ஏற்றுக்கொண்டதை விசேடமாகக் குறிப்பிட்டு இருவரையும் விடுவித்த தோடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!