Home » கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக உந்துருளியில் பயணித்த ஒருவர் மடக்கிப் பிடித்த காவல்துறை

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக உந்துருளியில் பயணித்த ஒருவர் மடக்கிப் பிடித்த காவல்துறை

by newsteam
0 comments
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக உந்துருளியில் பயணித்த ஒருவர் மடக்கிப் பிடித்த காவல்துறை

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக உந்துருளியில் பயணித்த ஒருவர் கடுகன்னாவ காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய அஹங்கம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கண்டி-கொழும்பு வீதியில் உந்துருளியில் பயணித்த இந்த நபரை காவல்துறை உத்தியோகத்தர்கள் கண்காணித்து பிடிக்க முற்பட்ட போதிலும் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.கடுகன்னாவ மற்றும் பேராதனை காவல்துறைக்கு தகவல் வழங்கியதையடுத்து வீதித் தடைகளைப் பயன்படுத்தி இந்த உந்துருளியை நிறுத்தியுள்ளனர்.கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.கடுகன்னாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!