Home » கொழும்பில் புற்றுநோக்கு சிகிச்சை பெற்றாலும் யாழில் சிகிச்சையை தொடரலாம்

கொழும்பில் புற்றுநோக்கு சிகிச்சை பெற்றாலும் யாழில் சிகிச்சையை தொடரலாம்

by newsteam
0 comments
கொழும்பில் புற்றுநோக்கு சிகிச்சை பெற்றாலும் யாழில் சிகிச்சையை தொடரலாம்

வட இலங்கையை வதிவிடமாகக் கொண்ட புற்றுநோயாளர்கள் கொழும்பில் சிகிச்சை பெற்று வருகையில் தமது நலிவுத் தன்மை காரணமாக அல்லது பிரயாணக் கஷ்டம் மற்றும் பணவசதிக் குறைவு காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சிகிச்சையைத் தொடர்வதற்காக தமது விருப்பில் செல்லுகையில் அங்கு சிகிச்சை மறுக்கப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.குறித்த விடயம் தொடர்பில் புற்றுநோயாளர்கள், மனித உரிமை ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சு, வெகுஜன ஊடகங்களூடாகவும் முறைப்பாடுகளைக் கொடுத்தும் கடந்த ஒரு வருடமாக போராடினர்.குறித்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்று புற்று நோயாளர்களின் நலன்கள் பூரணமாக பேணப்படும் முறையிலான முடிவுகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டு முள்ளமை குறிப்பிடத்தக்கது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பில் சிகிச்சை பெற்று வருகையில் நோயாளர்கள் தமது சிகிச்சையை யாழில் தொடர விரும்புமிடத்து தாம் பெற்ற சிகிச்சை தொடர்பான சகல விபரங்களையும் கடிதத்துடன் எடுத்துச் செல்லுமிடத்து தெல்லிப்பளையில் அங்கு உள்ள மருத்துவ மற்றும் கதிர்வீச்சு வசதிகளுடன் அங்கு சேவையாற்றும் புற்றுநோய் நிபுணர்களின் தீர்மானத்துடன் சிகிச்சை வழங்கப்படும் எனவும் அவர்கள் எவ்வித காரணத்துக்காகவும் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் எனவும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!