Thursday, August 14, 2025
Homeஇலங்கைசிறுமிக்கு மதுபானம் கொடுத்து வன்கொடுமை செய்த 32 வயது நபர் மொனராகலைவில் கைது

சிறுமிக்கு மதுபானம் கொடுத்து வன்கொடுமை செய்த 32 வயது நபர் மொனராகலைவில் கைது

மொனராகலை, கோனகம் ஆர பகுதியில் , 12 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த, அவரது தாய் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட 32 வயது கணவர் (சித்தப்பா) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிறுமியின் தாய் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்றுள்ள நிலையில் சிறுமியை அவரது சித்தப்பா (தாயின் இரண்டாவது திருமண கணவர்) மற்றும் பாட்டி கவனித்துக் கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த ஆண்டு ஜனவரி முதல், சந்தேக நபரான சித்தப்பா அவ்வப்போது சிறுமியை தொட்டு பாலியல் சேஷ்டை புரிந்துள்ளார். சந்தேக நபர் கூறியபடி செய்யாவிடின்,சிறுமியை அடித்து சித்திரவதை செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நாள், பாட்டி பிபில பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அன்று சிறுமி பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த போது சந்தேக நபர் சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று மதுபானம் கொடுத்து குடிக்க வற்புறுத்தி போதையில் மயக்கமடைந்த பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.அதற்கு பின்னரும் பல முறை சிறுமி பாடசாலை முடிந்து வீடு திரும்பிய போது சிறுமியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்ஒண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட பொம்மை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!