நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா சுவாமி வீதியுலா முடிந்து வசந்தமண்டபத்திற்கு போகும் போது சிவப்புச் சால்வை கட்டிய நபர் ஒருவர் அங்கிருந்த பெண்களை தாக்கியுள்ளார்.இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.இதனால் தாக்குதலை நடத்திய நபருக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் வசந்தமண்டபத்திற்கு முன்பாக முறுகல் நிலை ஏற்பட்டது. புதிதாக சிவப்பு சால்வை கட்டிக்கொண்டு நல்லூரில் சுற்றித்திரிபவர்கள் சிலர் அராஜகமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் ஒலிவாங்கியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.எனவே, இந்த பிரச்சினையை ஆலய நிர்வாகம் தீர்க்க வேண்டும் எனவும் தீர்க்க தவறும் பட்சத்தில் பக்தர்களுக்கும் அவர்களுக்குமிடையே வீண் முரண்பாடுகள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.