Sunday, July 27, 2025
Homeஇலங்கைசீதுவ பகுதியில் பொம்மையுடன் போதைப்பொருள் கடத்தல் – 29 வயது பெண் கைது

சீதுவ பகுதியில் பொம்மையுடன் போதைப்பொருள் கடத்தல் – 29 வயது பெண் கைது

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது குழந்தையைப் பயன்படுத்தி இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீதுவ ராஜபக்ஷபுர பகுதியில் இன்று (26) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்தப் பெண் கைது செய்யப்பட்டார். குறித்த பகுதியில் உள்ள விடுதிகளை பொலிஸார் சோதனை செய்தபோது, ஒரு அறையில் இருந்து பெண்ணொருவர் குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பொம்மையை எடுத்துச் சென்று கொண்டிருந்தார்.அதற்கமைய, சந்தேகத்தின் அடிப்படையில் பொம்மையை பரிசோதித்ததில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் ஒரு மின்னணு தராசு ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்தனர்.அதற்கமைய, குறித்த பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஐஸ் பெக்கட்டுக்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர்.அந்தப் பெண் தனது 8 வயது குழந்தைக்கு பொம்மையைக் கொடுத்து, குழந்தையுடன் கொட்டாஞ்சேனையில் இருந்து சீதுவ பகுதிக்கு போதைப்பொருட்களைக் கொண்டு வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.சீதுவ பகுதியில் போதைப்பொருட்கள் பொதி செய்யப்பட்டு, மீண்டும் கொட்டாஞ்சேனை பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நீர்கொழும்பு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேனவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்:  யாழ். செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை பார்வையிட்ட நீதிவான்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!