Home » செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள் மழையால் தாமதம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள் மழையால் தாமதம்

by newsteam
0 comments
செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள் மழையால் தாமதம்

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும், தொடர்ச்சியான மழையால் அகழாய்வுப் பணிகள் தாமதமடைந்துள்ளன.செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.வழக்கு விசாரணைக்குப் பின்னர், நீதவான் உள்ளிட்ட குழுவினர் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி பகுதியைப் பார்வையிட்டனர்.அப்போது, அந்த இடம் ஒரு களிமண் தரையாகக் காணப்படுகிறது. தொடர்ச்சியாக மழை பெய்யுமானால், இந்த இடத்தில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வது மிகவும் சிரமமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கு மீண்டும் திறந்த நீதிமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.அதேவேளை, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா அவர்களால் புதைகுழி அகழாய்வுக்கு கோரப்பட்ட நிதி, நீதி அமைச்சால் அனுமதிக்கப்பட்டு, அகழாய்வுப் பணியைத் தொடர குறிப்பிட்ட தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!