Home » தகாத உறவுக்காக கணவனை கொலை செய்த மனைவி

தகாத உறவுக்காக கணவனை கொலை செய்த மனைவி

by newsteam
0 comments
தகாத உறவுக்காக கணவனை கொலை செய்த மனைவி

பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலதர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்துள்ளார்.நேற்றிரவு (11) மேற்படி வீட்டில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் வீழ்ந்துக் கிடப்பதாக பேருவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவரை பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தில் 38 வயதுடைய பேருவளை, வலதர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.சம்பவ தினத்தன்று உயிரிழந்த நபருக்கும் அவரது திருமணத்துக்கு புறம்பான உறவில் இருந்த பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதைத் தொடர்ந்து, குறித்த பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சம்பவத்தில் 42 வயதுடைய பெண் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!