Home » தம்புள்ளையில் மிளகாய் தூள் என நினைத்து இரசாயனத்தை சுவைத்த 7 மாணவர்கள் மருத்துவமனையில்

தம்புள்ளையில் மிளகாய் தூள் என நினைத்து இரசாயனத்தை சுவைத்த 7 மாணவர்கள் மருத்துவமனையில்

by newsteam
0 comments
தம்புள்ளையில் மிளகாய் தூள் என நினைத்து இரசாயனத்தை சுவைத்த 7 மாணவர்கள் மருத்துவமனையில்

தம்புள்ளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆய்வகத்தில் இருந்த சிவப்பு நிற இரசாயனப் பொருளை மிளகாய் தூள் என நினைத்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் சுவைத்ததால், ஐந்து மாணவர்களும் இரண்டு மாணவிகளும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த விடுமுறை நாட்களில் ஆய்வகம் குரங்குகளால் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் சிதறடிக்கப்பட்டிருந்தன.இதன்போது, இரும்பைக் கண்டறியப் பயன்படும் இரசாயனப் பொருளை மாணவர்கள் சுவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து முறைப்பாடு பெறப்பட்டதை அடுத்து, தம்புள்ளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.கே. விக்ரமநாயக்க மற்றும் தலைமையக பொலிஸ் பரிசோதகர் சுகத் பண்டார ஆகியோர் வைத்தியசாலைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.மாணவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன

You may also like

Leave a Comment

error: Content is protected !!