Home » நாயால் நடந்த விபரீதம் – சிறுவன் பலி

நாயால் நடந்த விபரீதம் – சிறுவன் பலி

by newsteam
0 comments
நாயால் நடந்த விபரீதம் - சிறுவன் பலி

ராஜாங்கனை, அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்றிரவு (05) முச்சக்கரவண்டி, வீதியைக் கடக்கின்ற நாயுடன் மோதுவதைத் தவிர்க்க முற்பட்ட வேளையில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின் இருக்கையில் பயணித்த சிறுவனும் காயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்தார்.

சாரதி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.சிலாபம் – வெலிஹேன பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!