Tuesday, July 22, 2025
Homeஇலங்கைபாடசாலை நேரம் 30 நிமிடங்கள் அதிகரிக்கப்படும் – அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் அதிகரிக்கப்படும் – அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான முன்னைய திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து, பொருத்தமான மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.முன்னதாக, தயாரிக்கப்பட்ட முன்மொழிகள் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டவை. எனவே, கல்வி சீர்திருத்தங்களைத் தயாரிக்கும் போது அவற்றையும் கருத்தில் கொள்வது முக்கியம் என்று ரோஹினி கவிரட்ன கோரியுள்ளார்.இந்தநிலையில், அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கை வடிவில் கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தால், அத்தகைய செயல்முறை மூலம் சீர்திருத்தங்களைப் பரந்த விவாதத்திற்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விரைவில் ஒரு பொது அறிக்கையை வெளியிடவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீடிக்கப்படும் என்று கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.இதன்படி ஒரு பாடத்தின் நேரம் 45 நிமிடங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.பாடம் அல்லது தொகுதி அவசரமின்றி கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.மாணவர்களுக்குக் கற்பிக்க ஆசிரியருக்கு போதுமான நேரம் இருக்க வேண்டும், அதே நேரத்தில் மாணவர்கள் அவசரமின்றி இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க நேரம் தேவை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.இதேவேளை, பாடசாலைகளைக் காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இயக்குவதற்கு ஆரம்பத்தில் முன்மொழியப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர் அமரசூரியா, இருப்பினும், நேரத்தை அரை மணி நேரம் மட்டுமே நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.போக்குவரத்து போன்ற பிற சிக்கல்களைக் கருத்தில் கொண்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்

இதையும் படியுங்கள்:  போலீஸ் அதிரடிப்படை, இராணும் இணைந்து குடத்தனையில் இரண்டு மணிநேரம் சுற்றிவளைப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!